(It is a Print-on-Demand Book. Once you order the book we print and send exclusively to you. So the books will reach little late but within a maximum of 7 working days.)
No of Pages: 17 - A4 size
ஆனபான ஸதி என்பது உள்மூச்சு வெளிமூச்சின் மீதான தியானம் ஆகும். மனவிழிப்புணர்வின் அடிப்படைகள் தொடர்பான மகா உபதேசமான மஹாஸதி பட்டான சுத்தாவில் புத்தபகவானால் விளக்கப்பெறும் முதலாவது தியான பாடம் இது பூரண ஞானத்துக்கும், நிப்பானா எனப்படும் பரிநிர்வாணத்துக்குமான திறவுகோலாக - புத்தத்துவம் எய்துவதற்கான அடிப்படையாக - கடந்த காலத்தின் அனைத்து புத்தர்களும் எடுத்துக்கொண்ட தியானம் இது என்பதால், கௌதம புத்தர் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்திருந்தார். ஆசீர்வதிக்கப்பட்ட பகவன் போதி மரத்தடியில் அமர்ந்து பூரண ஞானம் பெறும் மட்டும் எழுவதில்லை என்று சங்கல் பித்துக்கொண்ட போது, அவர் ஆனபான ஸதியையே தனது தியானமுறையாகத் தேர்ந்தெடுத்தார். இதன் அடிப்படையில் அவர் நான்கு தியான சித்திகளை (jhanas ) அடைந்து, தனது கடந்த பிறவிகள் பற்றி அறிந்து கொண்டதோடு, பிறவிச்சுழலின் (Samsara) இயல்பை ஆழங்கண்டு, பேரறிவின் தொடர்கண்ணிகளை விழிப்பித்தார். விடியலின்போது ஒரு நூறாயிரம் உலகங்கள் அதிர, பரிபூரண விழிப்பை அடைந்த புத்தர் ஒருவரின் எல்லையற்ற ஞானத்தை அவர் அடைந்தார். ஆகவே, ஆனபான ஸதி தியானத்தின் வழியாக ஒப்பற்ற, உலகு கடந்த புத்தராக ஆனவரான ஆசீர்வதிக்கப்பட்டவருக்கு எமது வணக்கத்தைச் செலுத்துவோமாக. சூரிய சந்திரராகச் சுடர்விடும் ஞானத்துடன் இந்த தியான பாடத்தை முழுமையாக உள்வாங்குவோமாக. அதன் வல்லமை கொண்டு, நிப்பானாவின் ஆனந்தமயமான அமைதியை அடைவோமாக.