"தமிழ் சித்த மரபில் அகத்திய மகரிஷியின் குரு குலக் கற்கை யோகம், ஞானம், வாதம், மருத்துவம், மந்திரம் என்ற ஐந்து பகுதிகளையும் உடையது.
இந்த ஐந்தையும் நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு முதலில் இந்த ஐந்திற்கும் திறவுகோலான பரிபாஷைச் சொற்களில் பொருள் விளங்க பஞ்சகாவிய நிகண்டும், முழுக்கற்கையின் அறிமுகம் முதல்நிலைத் தீட்சைகள் பற்றி அறிவதற்கு, வாத சௌமியம் என்ற இரண்டு நூல்களும் முழுமையாகப் படிக்க வேண்டும்.
இதற்கு முன்தயாரிப்பாக யோக ஞானத்திற்குரிய திறவுகோலாக இருக்கும் சுருக்க நூலே, நீங்கள் இப்பொழுது கையில் பெறவிருக்கும் இந்த முதலாவது பாட நூல். இந்த நூலை நீங்கள் கற்ற பின்னர் உங்கள் அகத்தில் "நான் அகத்திய மாமகரிஷி அருளிய யோக, ஞான, வாத, வைத்திய, மந்திர சாத்திரங்களைக் கற்கவேண்டும்" என்ற அகத்தூண்டல் உருவாகினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும்"