பைரவர் என்றால் உக்கிரமான பயமுறுத்தும் தெய்வம் என்று பலரும் எண்ணி, பலவித மனக்கிலேசங்களை அடைகின்றனர். ஆனால் பைரவர் என்பது, சிவமாகிய செம்மையான அறிவிலிருந்து வெளிப்பட்ட ஒளியும், இச்சா ஸக்தியும் விழிப்புணர்வுமே! இதனை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. பைரவ ஸாதனையில் அனைவரும் ஈடுபடும் எளிய வழிமுறையையும் இது கூறுகிறது. தெய்வ ஸாதனை, உபாசனைகளில் ஒரு ஸாதகன் ஸித்தி பெற வேண்டுமாக இருந்தால், முதலில் அதற்குரிய தகுந்த 'சித்தப் பதிவுகளைக்' கொண்டிருக்க வேண்டும். ஒரு ஸாதகன் இந்த நூலைக் கற்பதால், பைரவ ஸாதனைக்குரிய சித்தப் பதிவுகளையும் அந்த ஸாதனையில் ஸித்தியும் பெறுவான் என்பதில் ஐயமில்லை! இது பைரவரைப் பற்றிய புராணத் தகவல்கள் நிறைந்த நூல் அல்ல! பைரவரை எப்படி தியானிப்பது என்பதை விளக்கும் அரிய நூல்!